பண்ருட்டி ரத்தனா பள்ளியில் விளையாட்டு போட்டி

பண்ருட்டி; பண்ருட்டி ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. பள்ளி முதல்வர் ரவி ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி போட்டியை துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் வாழ்த்துரை வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகள் ஏ.பி.சி.டி., என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டியில் ஏ பிரிவு மாணவன் விஸ்வநாதன் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்று சுழற்கோப்பையை கைப்பற்றினார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிகளை சிறப்பாக நடத்திய உடற்கல்வி ஆசிரியர்கள் கலைவாணன், தினேஷ் மற்றும் பவித்ராஜ் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.

Advertisement