புவனகிரி மகளிர் பள்ளியில் தன்னம்பிக்கை நிகழ்ச்சி

புவனகிரி; புவனகிரி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவியர்களுக்கு 'உங்களால் முடியும்' தன்னம்பிக்கை முகாம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

புவனகிரி ஊழல் எதிர்ப்பு இயக்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை சரவணஜான்சிராணி வரவேற்றார். ஊழல் எதிர்ப்பு இயக்க பொருளாளர் வீரபாண்டியன், துணைத் தலைவர் ஜெகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மணிமாறன், சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

சமூக ஆர்வலரும், தன்னம்பிக்கை பேச்சாளருமான மாறன், சப் இன்ஸ்பெக்டர் லெனின் அரசு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி, கல்வி உபகரணங்கள் வழங்கினர். அன்பழகன் தொகுத்து வழங்கினார்.

உதவி தலைமை ஆசிரியை எழிலரசி நன்றி கூறினார்.

Advertisement