வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி பரிசளிப்பு விழா

கடலுார்; கடலுார் செம்மண்டலத்தில், மெட்ரோ பிரண்ட்ஸ் மைதானத்தில் பள்ளிகளுக்கு இடையிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிகள் பிப்., 1 மற்றும் 2ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்பட்டது. மாணவர்களுக்கான பிரிவில் எட்டு அணிகளும், மாணவிகளுக்கான பிரிவில் ஆறு அணிகளும் பங்கேற்றன.

அதில், மாணவர்கள் பிரிவில் பண்ருட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லிக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி, கோழிப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, மஞ்சக்குப்பம் செயின்ட்ஜோசப் மேல்நிலைப்பள்ளி முறையே முதல் நான்கு இடங்களை பெற்று வெற்றி பெற்றன.

மாணவிகள் பிரிவில் கடலுார் புனித அன்னாள் மகளிர் பள்ளி, நெல்லிக்குப்பம் டேனிஷ்மிஷன் பள்ளி வெற்றி பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமார், கோப்பை வழங்கி பாராட்டினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், மாவட்ட வாலிபால் கழக தலைவர் புவனேந்திரன், துணைத் தலைவர் சாந்தகுமார் மற்றும் மெட்ரோ பிரண்ட்ஸ் குழுவினர் உடனிருந்தனர். சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை மாணவி கிரேஷ்மா, சிறந்த லிப்ரோவிற்கான விருதை மாணவி ராகவர்ஷினி பெற்றனர்.

Advertisement