வீனஸ் பள்ளியில் விளையாட்டு விழா
சிதம்பரம்; சிதம்பரம், அம்மாபேட்டை வீனஸ் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் விளையாட்டு தின விழா நடந்தது. வீனஸ் குழும பள்ளிகளின் தாளாளர் குமார் தலைமை தாங்கினார். முதல்வர் லியோ பெஸ்கிராவ் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை ஐஸ்வர்யா வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக்கழக யோகா துறை முன்னாள் இயக்குநர் வெங்கடாசலபதி, வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் ராதிகா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஒலிம்பிக் ஜோதி ஏற்றி போட்டியை துவக்கி வைத்தனர்.
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை கீதா ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆசிரியைகள் கயல்விழி மற்றும் ராசாத்தி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர்.
நாகலட்சுமி நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement