திருப்பரங்குன்றம் மலை விவகாரம்; திருப்பதி வேளாண் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல்

2

திருமலை: திருப்பதி வேளாண் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரை திருப்பரங்குன்றம் மலையில் கோவில் மற்றும் தர்கா விவகாரத்தில் ஹிந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், திருப்பதி வேளாண் பல்கலைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அண்ணா பல்கலையில் தயாரிக்கப்பட்ட ப்யூஸிங் சிஸ்டத்தை வைத்து தாக்குதல் நடத்த இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement