94 சதவீதம் குறைந்தது மொபைல் போன் கட்டணம்: ஜோதிராதித்ய சிந்தியா லோக்சபாவில் தகவல்

4

புதுடில்லி: கடந்த 2014 முதல் மொபைல் போன் கட்டணம் 94 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.

லோக்சபாவில் எதிர்கட்சிகள் மொபைல் போன் கட்டணம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்ததாவது:

நம் நாட்டில் 2014ல் 90 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி மொபைல் போன் சந்தாதாரர்கள் உள்ளனர்.

கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.



நுகர்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளை இந்த கட்டண குறைவுக்கு காரணம்.

இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில், மொபைல் போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.

மேலும் இது இணைய பயன்பாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுத்து, மேலும் பலர் டிஜிட்டல் சேவைகளை அணுகவும், டிஜிட்டல் பொருளாதாரத்தில் பங்கேற்கவும் உதவியுள்ளது.

தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது.

இவ்வாறு ஜோதிராதித்ய சிந்தியா பேசினார்.

Advertisement