வளர்ச்சி குறித்து காங்.,கிடம் எதிர்பார்ப்பது தவறு: பிரதமர் மோடி சாடல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848352.jpg?width=1000&height=625)
புதுடில்லி: '' அனைவருக்குமான வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு,'' என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி கூறினார்.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசியதாவது:
*ஜனாதிபதியின் உரை ஊக்கமளிப்பதாகவும், பயனுள்ளதாகவும், நம்மை முன்னேற்றி செல்வதாகவும் அமைந்துள்ளது. இந்த உரை மீது ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
*அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை காங்கிரசிடம் இருந்து எதிர்பார்ப்பது தவறு. அது அவர்களின் சிந்தனைக்கு அப்பாற்பட்டது. மேலும், அது அவர்களின் திட்டத்திற்கு பொருந்தாது. முழு கட்சியும் ஒரே குடும்பத்திற்கு மட்டும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஒரே குடும்பத்தை முன்னிறுத்துவது மட்டுமே காங்கிரசின் நோக்கம்.
*வளர்ச்சிக்கான எங்களின் திட்டத்தை மக்கள் சோதித்து புரிந்து கொண்டு ஆதரவு அளிக்கின்றனர். எங்களின் வளர்ச்சிக்கான திட்டம் என்பது நாடே முதன்மை என்பதாகும்.
* காங்கிரஸ் ஆட்சியில், அனைவரையும் திருப்திபடுத்த வேண்டி இருந்தது. இது தான் அவர்களின் அரசியல்பாதையாக இருந்தது. ஆனால், 2014க்கு பிறகு, நிர்வாகத்திற்கான மாற்று அரசு அமைந்ததும் அதில் கவனம் செலுத்தப்படவில்லை.
* வளர்ச்சி மீதான பார்வையால் தான் நாட்டு மக்கள் எங்களை 3வது முறையாக தேர்வு செய்தார்கள். நம்மிடம் உள்ள கருவிகளை முறையாக பயன்படுத்த வேண்டும். நாட்டின் வளங்களை மக்களின் நலனுக்காக முறையாக பயன்படுத்த வேண்டும்.
* சமூகத்தில் சாதியை வைத்து விஷம் பரப்பப்பட்டது. ஓ.பி.சி., ஆணையத்திற்கு அங்கீகாரம் கேட்டும் காங்கிரஸ் அதனை தரவில்லை. ஓ.பி.சி., ஆணையத்திற்கு பா.ஜ., அரசு தான் சட்ட அங்கீகாரம் வழங்கியது. பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு சுமூகமான முறையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. பட்டிலினம் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரும் இதனை வரவேற்றனர்.
*பார்லிமென்டின் இரு வைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது பா.ஜ., தான். புதிய பார்லிமென்டில் முதல் முடிவாக மகளிர் இட ஒதுக்கீடு வழங்குவது இருந்தது.
* அம்பேத்கரை காங்கிரஸ் வெறுத்த காலம் உண்டு. அவருக்கு எதிராக சதி செய்தது. பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்குவது குறித்து அக்கட்சி பரிசீலனை செய்யவில்லை. அவருக்கு மக்கள் அளித்த அங்கீகாரத்தினால் தான், தற்போது காங்கிரஸ் ' ஜெய்பீம்' என்கிறது.காங்கிரஸ். 2 முறை தேர்தலில் அவரை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் செய்தது.
* நிறத்தை மாற்றுவதில் காங்கிரஸ் கை தேர்ந்தது. தற்போது அக்கட்சி வேகமாக தனது முகமுடியை மாற்றியதை அனைவரும் பார்க்கின்றனர்.
*பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இதனால் தான் கூட்டணி கட்சிகள் கூட அக்கட்சியை விட்டு விலகிச் செல்கின்றன. பிறரை பலவீனப்படுத்தாமல் உங்கள் கட்சியை பலப்படுத்த முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால், மக்கள் எப்போதாவது காங்கிரசை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது.
*திறமையான விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க அரசு அனைத்து முனைகளிலும் பணியாற்றி உள்ளது. விளையாட்டு உள்கட்டமைப்புக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
*ஏழைகளை கைதூக்கிவிட எங்களதுஆட்சி காலத்தில் நடந்த பணிகளை போல், முன்பு எப்போதும் நடந்தது கிடையாது.
*வளரும் நாட்டில் இருந்து வளர்ந்த நாடு வரையிலான பயணம், உள்கட்டமைப்பு வழியாகவே செல்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.
*புதிய தொழில்நுட்பம் பெற இந்தியா நீண்ட காலம் காத்திருந்தது. இதில் மற்ற நாடுகளை காட்டிலும் பின்தங்கி இருந்தது.
*காங்கிரஸ் ஆட்சியில் இருந்த லைசென்ஸ் அனுமதி சீட்டு ராஜ்ஜியம் இந்தியாவின் முன்னேற்றத்தை பாதித்தது. லஞ்சம் பெருகியது.
*காங்கிரசின் தவறான கொள்கைகளால் ஹிந்துக்களின் பிம்பம் களங்கப்படுத்தப்பட்டது.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
![Bahurudeen Ali Ahamed Bahurudeen Ali Ahamed](https://img.dinamalar.com/data/uphoto/147532_171602279.jpg)
![பஜனேஷ் பஜனேஷ்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Amar Akbar Antony Amar Akbar Antony](https://img.dinamalar.com/data/uphoto/270633_133248819.jpg)
![அப்பாவி அப்பாவி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![நசி நசி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Smbs Smbs](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
கட்சியை உடைக்க பா.ஜ., சதி: ஆம் ஆத்மி புலம்பல்
-
டில்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் சச்சின்
-
அரசியலுக்காக கல்வி சீர்திருத்தங்களை எதிர்ப்பதா: ராகுலுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
-
ம.பி.,யில் போர் பயிற்சி விமானம் விபத்து: தப்பிய விமானிகள்
-
சுதந்திரத்தை விரும்பாத அரசு : வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா வேதனை
-
டில்லி தேர்தல்: 1,090 விதிமீறல் வழக்குகள் பதிவு