மசோதாவை நிறுத்தி வைத்தது ஏன்? கவர்னருக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

50

புதுடில்லி: '' தமிழக அரசு அனுப்பிய 12 மசோதாக்களை நிறுத்தி வைத்தது என்பது குறித்து கவர்னர் விளக்கமளிக்க வேண்டும்,'' எனக்கூறி வழக்கு விசாரணையை நாளை காலைக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்து உள்ளது.

'தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசின் முடிவுக்கு எதிராக கவர்னர் செயல்படுகிறார். சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்' என, கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மனு தாக்கல் செய்திருந்தது.


இந்த மனு, நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. காலை விசாரணை நடந்த நிலையில் மதியத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


அப்போது நீதிபதிகள் கூறியதாவது:12 மசோதாக்கள் மீது கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை. 2 மசோதாக்களை ஏன் ஜனாதிபதிக்கு அனுப்பினார். 10 மசோதாக்களை ஏன் நிறுத்தி வைத்தார். அனைத்து மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்பு இருந்தும் இரண்டை மட்டும் அனுப்பியது ஏன்


அரசியலமைப்பு விதி 200ஐ தவிர்த்து வேறு ஏதேனும் விதிமுறைகள் உள்ளதாஏன் மசோதாக்களை நிறுத்தி வைத்தார் என்பதை தெரிவிக்க வேண்டும். எந்த முடிவும் எடுக்காமல் நிறுத்தி வைத்த காரணத்தை விளக்க வேண்டும். கவர்னரின் அதிகாரத்தையும், பதவியையும் குறைத்து மதிப்பிடவில்லை. மசோதாவை கிடப்பில் போடும் கவர்னரின் நடவடிக்கையை மட்டும் முடிவு செய்ய உள்ளோம். நிறுத்திவைத்ததற்கு ஆதரவாக வாதிடுவதை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் கூறி, விசாரணையை நாளை காலை 10:30 மணிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement