புதிய ஆன்மிக தலைவராக ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பேற்பு

2

லிஸ்பன்: தனது தந்தையின் மரணத்தை தொடர்ந்து, ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் புதிய ஆன்மிக தலைவராக ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.


ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் 49வது பரம்பரை இமாம் ஆக நான்காவது ஆகா கான் கரீம் அல் ஹூசைனி இருந்தார். 88 வயதான அவர், வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.


தந்தையின் மரணத்தை தொடர்ந்து, ஷியா இஸ்மாயிலி முஸ்லிம்களின் புதிய ஆன்மிக தலைவராக நான்காகவது ஆகா கானின் மூத்த மகன் ரஹீம் அல் ஹூசைனி பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

53 வயதான ரஹீம் அல் ஹூசைனி, ஐந்தாவது ஆகா கான் என்ற பட்டத்துடன், 50வது பரம்பரை இமாம் ஆக பொறுப்பேற்றார். இவர் அமெரிக்காவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்போது இஸ்மாயிலி முஸ்லிம்களின் புதிய ஆன்மிக தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.

Advertisement