சுதந்திரத்தை விரும்பாத அரசு : வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா வேதனை

21

புதுடில்லி: பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற விரும்பாதவர்கள் தான் இப்போது வங்க தேசத்தில் அதிகாரத்தில் உள்ளனர் என்று எழுத்தாளர் தஸ்லிமா குற்றம்சாட்டினார்.

வங்கதேசத்தின் டாக்காவில் உள்ள ஷேக் முஜிபுர் ரஹ்மானின் வீட்டின் மீது நடந்த தீ வைப்புத் தாக்குதல் குறித்து நாடு கடத்தப்பட்ட வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் இன்று வேதனை தெரிவித்தார்.
டாக்காவில் நடந்த முஜிபுர் ரஹ்மான் இல்லம் தீவைப்பு படங்களைப் பகிர்ந்து "அழு, வங்கதேசம், அழு," என தஸ்லிமா நஸ்ரின் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு வருமாறு;

சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவுகளை ஒருபோதும் அழிக்கக்கூடாது. தலைநகரின் தன்மோண்டி பகுதியில் உள்ள இடிபாடுகளில் ஒரு அருங்காட்சியகம் கட்டப்பட வேண்டும். மேலும் இந்த நாசவேலைக்குப் பின்னால் உள்ளவர்கள் சுதந்திர வங்கதேசத்தை ஒருபோதும் விரும்பாதவர்கள். மதச்சார்பின்மையை நிராகரித்தவர்கள்.


சுதந்திர வங்கதேசத்தின் சிற்பியின் கடைசி சுவடு இன்று எரிந்து சாம்பலாக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னால் இருந்த அனைவரும் இஸ்லாமிய பயங்கரவாதிகள். அவர்கள் ஏன் ஷேக் முஜிப்பின் அருங்காட்சியகத்தைத் தாக்கி எரித்தார்கள். 1971ல் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற விரும்பாதவர்கள் இப்போது அதிகாரத்தில் உள்ளனர்.

ஹசீனாவை நாட்டை விட்டு வெளியேற்றுவது போதாதா? ஷேக் முஜிப்பின் அருங்காட்சியகத்தைத் தாக்கியவர்கள், சுதந்திர வங்கதேசத்தை ஒருபோதும் விரும்பாதவர்கள். மதச்சார்பின்மையை நிராகரித்தவர்கள், 1971ல் இஸ்லாமிய அரசை விரும்பியவர்கள். பாகிஸ்தான் போன்ற ஒரு போராளி அரசுடன் இணைய விரும்பியவர்கள். அவர்களும் அவர்களின் சந்ததியினரும் இன்று எல்லாவற்றையும் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். பெண் வெறுப்பாளர்கள். அவர்கள்தான் இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள்.

இவ்வாறு தஸ்லிமா கூறியுள்ளார்.

Advertisement