டில்லியில் ஜனாதிபதியை சந்தித்தார் சச்சின்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848356.jpg?width=1000&height=625)
புதுடில்லி: முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், குடும்பத்தினருடன் டில்லி சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணிந்து விளையாடிய ஜெர்சியை பரிசாக ஜனாதிபதியிடம் கொடுத்தார்.
தற்போது 51 வயதாகும் சச்சின் 664 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 200 டெஸ்ட் மற்றும் 463 ஒரு நாள் போட்டிகள் அடக்கம். டெஸ்ட் கிரிக்கெட்டில் 15,921 ரன்கள், ஒரு நாள் போட்டியில் 18,426 ரன்கள் குவித்து என பல்வேறு சாதனைகளை அவர் படைத்து உள்ளார். இதற்காக அவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பி.சி.சி.ஐ.,யின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றார்.
இந்நிலையில், இன்று அவர் ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர் அவருடன் கலந்துரையாடினார். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் அணிந்து விளையாடிய ஜெர்சியில் கையெழுத்து போட்டு, அதனை பரிசாக முர்முவிடம் அளித்தார். அப்போது, சச்சின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.
மேலும்
-
வருண், திரிஷா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு
-
ராம்குமார்-மைனேனி அபாரம்: சென்னை ஓபன் டென்னிசில்
-
காலிறுதியில் ராஷ்மிகா: மும்பை ஓபனில் முன்னேற்றம்
-
தேசிய விளையாட்டு: தீபிகா குமாரி 'தங்கம்'
-
ஸ்டாய்னிஸ் திடீர் ஓய்வு: ஆஸ்திரேலிய அணிக்கு சிக்கல்
-
சத்தீஸ்கரில் நக்சல் ஆதிக்கத்திற்கு விரைவில் முடிவு; முகாம் அமைத்தது பாதுகாப்பு படை