காலிறுதியில் ராஷ்மிகா: மும்பை ஓபனில் முன்னேற்றம்

மும்பை: மும்பை ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா முன்னேறினார்.

மும்பையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., மும்பை ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 'ரவுண்ட்-16' போட்டியில் இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குரூனிக் மோதினர். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ராஷ்மிகா, 2வது செட்டை 6-0 என மிகச்சுலபமாக வென்றார். முடிவில் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா 6-4, 6-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா 5-7, 6-2, 6-7 என கனடாவின் ரெபெக்கா மரினோவிடம் போராடி தோல்வியடைந்தார்.
இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்பரே, நெதர்லாந்தின் அரியோன் ஹார்டோனோ ஜோடி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹிபினோ, ஜார்ஜியாவின் கலாஷ்னிகோவா ஜோடியை வீழ்த்தியது.

Advertisement