ரஷ்யா விண்வெளி ஆய்வு மைய தலைவர் நீக்கம் :லூனா-25 விண்கலம் தோல்வியால் அதிரடி
மாஸ்கோ: இந்தியாவிற்கு போட்டியாக நிலவில் ஆய்வு மேற்கொள்ள ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் தோல்வியடைந்ததால், ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய தலைவர் யூரி போரிஸ்னோ அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தில் நீர்வளம், கனிம வளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வற்காக சந்திராயன் -3 என்ற விண்கலத்தை எல்விஎம்-3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் ஆக. 24-ல் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி உலக நாடுகளை ஆச்சார்யப்பட வைத்து சாதனை படைத்தது.
இந்நிலையில் இஸ்ரோவுக்கு போட்டியாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய நிறுவனமான ரோஸ்கோஸ்மாஸ், லூனா-25 என்ற என்ற விண்கலத்தை சோயஸ் ராக்கெட் மூலம் கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தியது. திட்டமிட்டபடி ஆக்.17-ல் நிலவில் தரையிறங்க முயற்சிமேற்கொண்டது. அதன் முயற்சி தோல்வியில் முடிந்தது.
நிலவின் தென் துருவத்திற்கு 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக லூனா-25 விண்கலத்தை அனுப்பிய ரஷ்யாவின் முயற்சி தோல்வியில் முடிந்தததால் அதிர்ச்சியடைந்தது.
இந்நிலையில் தோல்விக்கு காரணமான ரோஸ்கோஸ்மாஸ் நிறுவனத்தின் தலைவர் யூரி பேரிஸ்னோ, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக போக்குவரத்துறை அமைச்சர் டிமிட்ரி பகானோவ் ரோஸ்கோஸ்மாஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்.