இந்த உணவு முறை மூளைக்கு நல்லது
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848376.jpg?width=1000&height=625)
மத்திய தரைக்கடலை ஒட்டிய கிரேக்கம், இத்தாலி முதலிய நாடுகளில் பின்பற்றப்படும் உணவுமுறை பல சிறப்புகளை உடையது. இது உடலுக்கு பலவித நன்மைகள் செய்யும் என்று ஏற்கனவே வெளிவந்த அறிவியல் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவில் பழங்கள், காய்கறிகள், பயறு வகைகள், முழு தானியங்கள், சீஸ் உள்ளிட்ட பால் பொருட்கள் ஆகியவை அதிகளவில் இடம்பெறும். சிலவகை மீன்களைத் தவிர்த்து வேறு இறைச்சி வகைகள் குறைவாகவே இருக்கும். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள இலினாய் பல்கலை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. 3,000 பேர் பங்கேற்றனர். இவர்களுக்குப் பிற உணவுகளுடன் மத்திய தரைக்கடல் உணவு வகைகள் பல்வேறு விகிதங்களில் கலந்து தரப்பட்டன.
ஆய்வாளர்கள், கலந்துகொண்டவர்களின் மூளையைத் தொடர்ந்து, சில விதமான எம்.ஆர்.ஐ., ஸ்கேன்கள் எடுத்துக் கண்காணித்தனர். மூளை, தண்டுவடம் ஆகியவற்றின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைக்கக் கூடிய தசையை வெள்ளைப் பொருள் என்று அழைப்பர்.
யார் யாரெல்லாம் மத்திய தரைக்கடல் உணவு வகைகளை அதிக விகிதத்தில் உண்டனரோ, அவர்களின் மூளையில் உள்ள வெள்ளைப் பொருட்கள் நல்ல ஆரோக்கியம் அடைந்திருந்தது தெரியவந்தது. குறைவான விகிதங்களில் சாப்பிட்டவர்களுக்கு எந்த மாற்றமும் காணப்படவில்லை.
மத்திய தரைக்கடல் உணவு களை சாப்பிட்டவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் ஆரோக்கியம் அடைந்தன.
மூளையில் காணப்பட்ட வீக்கம் குறைந்தது. ரத்தச் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. இந்த உணவாய் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதால், மூளையும் ஆரோக்கியம் அடைகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
மேலும்
-
'கலாசாரம், ஒற்றுமையை பாதுகாப்பதில் துறவியரின் பங்கு இன்றியமையாதது'
-
'சூப்பரா' சுப்மன்... ஜோரா இந்தியா * வீழ்ந்தது இங்கிலாந்து அணி
-
ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்
-
வருண், திரிஷா பரிந்துரை: ஐ.சி.சி., விருதுக்கு
-
ராம்குமார்-மைனேனி அபாரம்: சென்னை ஓபன் டென்னிசில்
-
காலிறுதியில் ராஷ்மிகா: மும்பை ஓபனில் முன்னேற்றம்