ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு: கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்

10

வேலூர்: ரயிலில், 4 மாத கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்ட நிகழ்வு அரங்கேறி உள்ளது.


திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 4 மாத கர்ப்பணி ஒருவர், கோவையில் இருந்து திருப்பதி செல்லும் ரயிலில் பயணித்து உள்ளார். ரயில், வேலூர் மாவட்டம் கேவி.குப்பம் அருகே சென்ற போது, அந்த பெண் கழிவறைக்கு சென்றுள்ளார்.


அப்போது அவருக்கு, ஜோலார்பேட்டையில் ஏறிய ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனையடுத்து அந்த பெண் கூச்சலிட்டார். இதனால், இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.


தொடர்ந்து, அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளவிட்டதாக புகார் எழுந்துள்ளது. அதில் அந்த பெண்ணுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement