மாநகராட்சி பள்ளி வராண்டாவில் சமையல் அறை இயங்கும் அவலம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848676.jpg?width=1000&height=625)
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெருவில், டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாநகராட்சியின் மையப்பகுதியில் இப்பள்ளிக்கு சத்துணவு சமையல் செய்வதற்கு என, தனி கட்டடம் வசதி இல்லை.
இதனால், இயற்பியல் ஆய்வக கட்டடத்தில் நுழைவாயில் பகுதியை ஒட்டியுள்ள வராண்டாவில் சமையல் அறை இயங்கி வருகிறது. போதுமான இடவசதி இல்லாமல் சமையல் அறை இயங்குவதால், இயற்பியல் ஆய்வகத்திற்கு சென்று வரும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
பலத்த மழை பெய்யும்போது சாரல் அடிப்பதில் சமையல் செய்வதில் இடையூறு ஏற்படுகிறது. எனவே, டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதற்கு என, சமையல் அறை கட்டடம் கட்ட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
மூன்று மாதங்களாக உதவித்தொகை நிறுத்தம்: மாற்றுத்திறனாளிகள் அவதி
-
ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட 7 நகரங்களுக்கு 'மாஸ்டர் பிளான்'
-
சிறுமியருக்கு தொந்தரவு கொடுத்த 6 பேருக்கு 'கம்பி'
-
அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை தனியாரிடம் வழங்கப்படாது என அறிவிப்பு
-
கடனை செலுத்திய பிறகும் கெடுபிடி வருத்தம் தெரிவித்து வங்கி கடிதம்
-
மினி லாரி கவிழ்ந்து விபத்து மீன்களை அள்ளி சென்ற மக்கள்