சிறுமியருக்கு தொந்தரவு கொடுத்த 6 பேருக்கு 'கம்பி'

சிவகங்கை: மானாமதுரை அருகே அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் 8 மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத் ததாக கைதான 7 பேரில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேவுள்ள ஒரு கிராமத்தில் அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அந்த விழிப்புணர்வு வாயிலாக மாணவியர் 8 பேர் பள்ளிக்கு செல்லும்போதும் வீட்டுக்கு வரும்போதும் சிலர் இதேபோன்ற கெட்ட தொடுதல் செய்வதாக குழந்தைகள் நலக்குழுவிடம் கூறினர்.

குழந்தைகள் நலக்குழு வினர் மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தெரிவித்தனர். போலீசார் கிராமத்திற்குச் சென்று மாணவியரின் பெற்றோரிடம் புகார் பெற்று ராமு, 46, மணி, 50, சசிவர்ணம், 38, லட்சு மணன், 46, முனியன், 66, மூக்கன், 72, பழனி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.

ஆத்திரமடைந்த பெற்றோர் தாக்கியதில், ராமு காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். மற்ற 6 பேரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement