ரத்தினங்கி சேவை அலங்காரத்தில் வல்லக்கோட்டை முருகன்
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஏழு அடி உயரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் தை கிருத்திகை உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைப்பெறும். இந்தாண்டு, தை கிருத்திகையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, மூலவர் மற்றும் உற்சவர் முருகபெருமானுக்கு சிறப்பு அபி ேஷகம் நடந்தது.
தை கிருத்திகை நாளான நேற்று, அதிகாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கோ பூஜை, மூலவர் வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணிய சுவாமிக்கு பால் அபி ேஷகம் மற்றும் சிறப்பு அலங்காரத்திலும், உற்சவருக்கு ரத்தினாங்கி சேவை மஞ்சள் நிற அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
ஏராளமான பக்தர்கள் வரிசையில் வந்து, அரோகரா அரோகரா கோஷத்துடன் முருக பெருமானை வழிபட்டனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.
***