மனித உருவ சுடுமண் கால் பகுதி அகழாய்வில் கண்டெடுப்பு
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3848788.jpg?width=1000&height=625)
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் மனித உருவத்தின் சுடுமண் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுக்கப்பட்டது.
இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 18 குழிகளில் உடைந்த நிலையில் சுடு மண் உருவ பொம்மை, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 3350 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மனித உருவத்தின் சுடுமண் கால் பகுதி, விலங்கின் பல், பளிங்கு கல் கண்டெடுக்கப்பட்டது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில்'' ஏற்கனவே சுடுமண் மனித உருவத்தின் தலைப்பகுதி கிடைத்த நிலையில் தற்போது உடைந்த நிலையில் கால் பகுதி கிடைத்துள்ளது.
முன்னோர் இங்கு விலங்குகளை வளர்க்கவும், வேட்டையாடவும் செய்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள பல் எந்த விலங்குடையது, என்ன காலம் என்பது ஆய்விற்கு பின்னர் தெரியவரும் என்றார்.