தைப்பூசத்திற்கு விடுமுறை சன்மார்க்க சங்கம் கோரிக்கை
புதுச்சேரி : தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச் செயலாளர் கோதண்டபாணி விடுத்துள்ள அறிக்கை:
வடலுார் சத்திய ஞான சபையில் வரும் 11ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனம் நடக்கிறது.
புதுச்சேரி அரசு, தைப்பூச ஜோதி தரிசனத்தை போற்றும் வகையில் அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும்.
மேலும், வள்ளலாரின் 200வது ஆண்டை போற்றும் வகையில் புதுச்சேரி அரசு நினைவு ஸ்துாபி அமைத்திட வேண்டும்.
மேலும் , வள்ளலாரின் ஒழுக்க நெறியை மாணவர்களின் பாடப்புத்தகங்களில் இடம் பெறச் செய்திட வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement