நவோதயா வித்யாலயாவில் நாளை நுழைவுத் தேர்வு
புதுச்சேரி : காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் இயங்கி வரும் நவோதயா வித்யாலயா பள்ளியில் எதிர்வரும் 2025-26 கல்வியாண்டில் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் உள்ள காலி இடங்களுக்கான நுழைவுத் தேர்வு நாளை 8ம் தேதி நடக்கிறது.
இதில் 9ம் வகுப்பிற்கு 241 பேரும், 11ம் வகுப்பிற்கு 223 பேரும் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் நாளை காலை 9:00 மணிக்கு, தேர்வு மையமான பெரியகாலாப்பட்டு நவோதயா பள்ளியில் இருக்க வேண்டும். மேலும், தேர்வு அனுமதி சீட்டில் கொடுத்துள்ள வழிமுறை மற்றும் நெறிமுறைகறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
பெரியகாலாப்பட்டு நவோதயா வித்யாலயா பள்ளியில் 9 வகுப்பில் காலியாக உள்ள 12 இடங்களும், பிளஸ் 1 வகுப்புகளில் வணிகவியல் பாடப்பிரிவில் 40 இடங்கள், அறிவியல் பாடப்பிரிவில் 40 இடங்கள் என மொத்தம் 80 இடங்களும் நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படவுள்ளது.
இதற்கிடையே, பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையில், அதே பள்ளியில் பயிலும் 10ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் நிரப்புவதற்கு முதலில் முன்னுரிமை அளிக்கப்படும்.
அதன்பிறகே, நுழைவு தேர்வு மூலம் தேர்வாகும் மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கை நடத்தப்படும்.