தோல்வி பயத்தில் புலம்பும் கெஜ்ரிவால்; பா.ஜ., விமர்சனம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849112.jpg?width=1000&height=625)
டில்லி: டில்லி சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி பயத்தின் காரணமாக, ஆம்ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் புலம்பி வருவதாக பா.ஜ, விமர்சனம் செய்துள்ளது
கடந்த 5ம் தேதி டில்லி சட்டசபைக்கு நடந்த ஓட்டுப் பதிவில், 60 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்தத் தேர்தலில் பா.ஜ., பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என, தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனை ஆம்ஆத்மி கட்சி ஏற்க மறுத்து வருகிறது. மீண்டும் 3வது முறையாக ஆட்சியை தக்க வைப்போம் என்று அக்கட்சியினர் கூறி வருகின்றனர்.
இதனிடையே, 16 ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு தலா ரூ.1 கோடி கொடுத்து பா.ஜ., தங்கள் வசம் இழுக்க முயற்சிப்பதாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி வருவதாகவும் தெரிவித்திருந்தார். அதேபோல, 7 ஆம்ஆத்மி வேட்பாளர்களை இழுக்க ஆபரேசன் லோட்டஸ் திட்டத்தை பா.ஜ., செயல்படுத்தி வருவதாக ஆம்ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங்கும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், ஆம்ஆத்மியின் இந்த குற்றச்சாட்டு குறித்து டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திரா சச்தேவா மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், 'தேர்தல் தோல்வி பயம் காரணமாக, கெஜ்ரிவால் இதுபோன்று பேசி வருகிறார். 'சஞ்சய் சிங் தன்னுடைய கருத்துக்களை திரும்பபெற வேண்டும். அவரது இந்தப் பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்,'எனக் கூறியுள்ளார்.
![Raman Raman](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Kuppusamy Kuppusamy](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Barakat Ali Barakat Ali](https://img.dinamalar.com/data/uphoto/444798_115337820.jpg)
![அப்பாவி அப்பாவி](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
கர்நாடகா முதல்வருக்கு நிம்மதி: நில மோசடி வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு மறுப்பு
-
பிரான்சில் பிப்.,11ல் ஏ.ஐ., உச்சி மாநாடு; பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
100 சதவீதம் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு; கோவை மாநகராட்சியை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராட்டம்
-
உ.பி., மஹா கும்பமேளாவில் 3வது முறையாக தீவிபத்து
-
யானை தாக்கியதில் இருவர் காயம்
-
கேள்வி கேட்டால் உங்களுக்கு கோபம் வருகிறதா? தி.மு.க., மீது அண்ணாமலை பாய்ச்சல்