அறிவியல் ஆயிரம் : வெப்பமான மாதம்

அறிவியல் ஆயிரம்


வெப்பமான மாதம்

குளிர்ச்சியான 'லா நினா', அமெரிக்காவில் நிலவிய வழக்கத்திற்கு மாறான குளிர் உள்ளிட்டவை இருந்த போதும் ஜனவரி மாத வரலாற்றில் இந்த (2025) ஜனவரி மிக வெப்பமான மாதமாக மாறியுள்ளது என ஐரோப்பாவின் காபர்னிகஸ் பருவநிலை மாற்ற சேவை ஆய்வு தெரிவித்துள்ளது. இதற்கு முன் வெப்பமான ஜனவரியாக 2024 இருந்தது. கடந்தாண்டு ஜனவரியை விட இந்தாண்டு 0.9 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. கார்பன், மீத்தேன் உள்ளிட்ட பசுமை இல்ல வாயுக்கள் வெளியீடு அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

Advertisement