கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் பயங்கர தீவிபத்து; ஒருவர் படுகாயம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_384915120250207183633.jpg?width=1000&height=625)
கோவில்பட்டி:கோவில்பட்டி சிட்கோவில் அமைந்துள்ள தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளத்தில் இயங்கி வரும் சிட்கோ தொழிற்பேட்டையில் விஜயகாந்த் என்பவருக்கு சொந்தமான ராமகிருஷ்ணா தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையை செண்பக விநாயகமூர்த்தி மற்றும் சிராக் ஆகியோர் லீஸ்க்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.
இன்று வழக்கம் போல தீப்பெட்டி ஆலையில் ஊழியர்கள் தீப்பெட்டி உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தபோது. திடீரென இயந்திரப் பகுதியில் தீப்பிடித்து மளமளவென எரிந்து பற்றி எறிய தொடங்கியது. இந்த தீ விபத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த எட்டயபுரத்தைச் சேர்ந்த முனியசாமி என்பவருக்கு மட்டும் சிறுகாயம் ஏற்பட்டது.
![Tamil News](gallery_2024/gallerye_183646259_3849151.jpg)
![Tamil News](gallery_2024/gallerye_183656625_3849151.jpg)
![Tamil News](gallery_2024/gallerye_183703259_3849151.jpg)
![Tamil News](gallery_2024/gallerye_183708392_3849151.jpg)
கோவில்பட்டி தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலையின் மற்ற பகுதியிலிருந்து தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் மூலப் பொருட்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இந்த தீ விபத்தில் தீப்பெட்டி உற்பத்திக்கான இயந்திரங்கள் , தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் கட்டிடம் உள்ளிட்டவை சேதம் அடைந்துள்ளன. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை எடுத்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஓட்டு சதவீதத்தை வெளியிட மறுக்கும் தேர்தல் கமிஷன்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
-
பாதுகாப்பில் உறுதி: இந்திய கடற்படையின் சிறப்பு பயிற்சியில் ராணுவம், விமானப்படை
-
இறந்தும் வாழும் குருராஜ்!
-
நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவக்கம்: மே 4ல் நடக்கிறது தேர்வு
-
பள்ளி விடுதியில் 9 ம் வகுப்பு மாணவி தற்கொலை
-
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல்; ராமதாஸ் வேதனை
Advertisement
Advertisement