ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர் காலமானார்

அயோத்தி :உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவரான, விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி காமேஷ்வர் சவுபால், 68, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, உலகம் முழுதும் இருந்து ஏராளமானோர் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

ராமர் கோவில் உருவாக முக்கியமானவர்களில், ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ர அறக்கட்டளையின் நிர்வாகிகளில் ஒருவரான, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த காமேஷ்வர் சவுபாலும் ஒருவர்.

கடந்த, 1989ல் ராமர் கோவில் கட்டுவதற்கான கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டபோது, முதல் செங்கல்லை எடுத்து வைத்தார்.

பீஹாரின் பாட்னாவைச் சேர்ந்த இவர், கடந்த சில நாட்களாக சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

டில்லியில் உள்ள சார் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இவர் காலமானார்.

Advertisement