எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் மோசடி மேலும் மூன்று ஏஜன்ட்கள் கைது
புதுச்சேரி:எம்.பி.பி.எஸ்., சேர்க்கையில் என்.ஆர்.ஐ., சீட் மோசடி வழக்கில் மேலும் 3 ஏஜன்ட்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் அரசு மருத்துவ கல்லுாரி, 3 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் பிரிவில் 15 சதவீதம் இடஒதுக்கீடு அடிப்படையில் 116 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு சேர்க்கை நடக்கிறது.
நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெறும் பலர், ஏஜென்ட் மூலம் போலியான வெளிநாடு துாதரக ஆணவங்களை தாக்கல் செய்து, என்.ஆர்.ஐ., ஸ்பான்சர் ஒதுக்கீடு மருத்துவ இடங்களை பெறுவதாக புகார் எழுந்தது. எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு மாணவர்கள் கொடுத்த ஆவணங்களை பரிசோதித்ததில், 74 ஆவணங்கள் போலியானது என தெரியவந்தது. இதனால் 74 மாணவர்களுக்கு வழங்கிய எம்.பி.பி.எஸ்., சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
மோசடி குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர், லாஸ்பேட்டை போலீசில் கடந்த செப்டம்பர் மாதம் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து போலி ஆவணம் சமர்ப்பித்த மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். துாதரகம் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்த ஏஜென்ட்கள் 6 பேரை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில், வெளிநாடு துாதரகம் பெயரில் போலி ஆவணங்களை, கன்னியாகுமரியை தலைமை இடமாக கொண்டு 30க்கும் மேற்பட்ட ஏஜன்ட்கள் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
அவர்களை கைது செய்ய சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையில், 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், நாகியம்பட்டியை சேர்ந்த மனோஜ் பிரபாகர், 37; தஞ்சாவூர், திருவையாறு வெள்ளாம் பெரம்பூரை சேர்ந்த செல்வதுரை, 35; ஆகிய இருவரை தனிப்படை போலீசார் திருச்சியில் கைது செய்தனர். மற்றொரு தனிப்படையினர், சென்னையை சேர்ந்த ஏஜன்ட் ரமேஷ் என்பவரை கைது செய்தனர். மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
நெடுஞ்சாலை தடுப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கை இல்லாததால் --தொடரும் விபத்து
-
அருப்புக்கோட்டை புதிய தாலுகா அலுவலக கட்டடத்தில் வயரிங் பணிகள் தீவிரம்
-
அரசு மகப்பேறு மருத்துவமனையில் நள்ளிரவில் ஆய்வு செய்த கலெக்டர்
-
இருக்கன்குடி கோயிலில் தை கடைசி வெள்ளி திருவிழா
-
பராமரிப்பில்லை: ஊராட்சிகளில் கால்நடை குடிநீர் தொட்டிகள்: கோடை காலத்தில் பாதிப்பை தடுப்பது அவசியம்
-
ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு பிப்.27 டெண்டர்