வாலிபர் தற்கொலை

கடலுார்: உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த வாலிபர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார், முதுநகர் சோனகஞ்சாவடியைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சத்யகிருஷ்ணன்,25, மீனவரான இவருக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. இவருக்கு அடிக்கடி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement