ரூ.75 லட்சம் ' ஹவாலா ' பறிமுதல்
எம்.கே.பி.நகர்: எம்.கே.பி.நகர் 7வது குறுக்குத் தெருவில் நேற்று, எம்.கே.பி.நகர் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
'ஹூண்டாய் வென்யூ' காரை நிறுத்தி சோதனையிட்டதில், 75 லட்சம் ரூபாய் இருந்தது. அதிலிருந்தோர், ஆந்திரா, நெல்லுாரைச் சேர்ந்த விக்கி, 35, லோகேஷ், 30, என்பதும், எஸ்.பி.ஆர்., சிட்டியில் வீடு வாங்குவதற்காக பணம் எடுத்து வந்ததாகவும் கூறினர்.
உரிய ஆவணங்கள் இல்லாததால், பணத்தை பறிமுதல் செய்த போலீசார், வருமான வரித்துறையில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement