வரலாறு காணாத விலை உயர்வு தங்கம் விற்பனை 20 சதவீதம் குறைவு
சென்னை:தமிழகத்தில் தங்கம் சவரன் விலை, வரலாறு காணாத அளவுக்கு 63,000 ரூபாயை தாண்டியதால், விற்பனை 20 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியாவில் தங்கம் பயன்பாடு மற்றும் விற்பனையில் தமிழகம் முன்னணியில் உள்ளது. கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு, தங்கத்தை மட்டுமே பணமாக மாற்ற முடியும்.
எனவே, தங்கம் விலை உயர்ந்தாலும், பலர் வாங்கும் அளவை குறைத்து வாங்குகின்றனர். தமிழகத்தில் உள்ள நகை கடைகளில் பழையது, புதியது என, தினமும் சராசரியாக 15,000 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின்றன.அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, 10 - 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.
அதற்கு பதிலடியாக அந்நாடுகளும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதித்துள்ளன. இதனால், உலக பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
எனவே, முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருகின்றனர். சீனாவும் அன்னிய செலாவணி கையிருப்பை தங்கமாக மாற்றி வருகிறது. இதனால், உலக சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, நம் நாட்டிலும் தங்கம் விலை உச்சத்தை எட்டி வருகிறது.
தமிழகத்தில், 22 காரட் ஆபரண தங்கம் சவரன் விலை, எப்போதும் இல்லாத வகையில் 63,440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜன., 1ல் சவரன், 57,200 ரூபாய்க்கு விற்பனையானது.
ஒன்றரை மாதங்கள் கூட ஆகாத நிலையில், சவரனுக்கு 6,240 ரூபாய் அதிகரித்துள்ளது. குறுகிய நாட்களில் தங்கம் விலை மிகவும் அதிகரித்து வருவது, இதுவே முதல் முறை. அதனால், விலை உயர்வு காரணமாக, தங்கம் விற்பனை 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும்
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
-
வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு
-
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்
-
இந்தியா பதிலடி
-
மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ்