நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி
நாமக்கல் - சேலம் சாலையில் கடும் பனி மூட்டத்தால் அவதி
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நடப்பாண்டு தொடக்கம் முதல் பனியின் தாக்கம் இருந்து வருகிறது. சில நாட்களாக, நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பனியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, நாமக்கல் - சேலம் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது.
இது, வாகன ஓட்டி களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியதால், தங்கள் வாகனங்களை மெதுவாக ஓட்டிச்சென்றனர்.
மேலும், குளிர்ந்த காற்று வீசியதால் கடும் குளிர் நிலவியது. இதனால், அதிகாலையில் எழுந்து வேலைக்கு செல்பவர்கள், நடைபயிற்சிக்கு செல்வோர் கடும்
அவதிக்குள்ளாகினர். காலை, 10:00 மணிக்கு பிறகே சூரியக்கதிர்கள் பூமியில் விழத்தொடங்கின. அதை தொடர்ந்து பனி மூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அதிக அளவில் பனி மூட்டம் காணப்பட்டது.
மேலும்
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
-
வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு
-
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்
-
இந்தியா பதிலடி
-
மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ்