ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது
ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த25 பவுன் கட்டியாக மீட்பு: 2 பேர் கைது
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, ஆசிரியர் வீட்டில், 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து தங்க கட்டியை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம், மேட்டுத்தெருவை சேர்ந்தவர் அழகப்பன், 62; ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர். இவரது மனைவி சுப்புலட்சுமி, 55; இவர், அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். கடந்த, ஆறு மாதத்திற்கு முன், வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகளை பார்க்க தம்பதியர் சென்றனர். அப்போது, ஆளில்லாத வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், வீடு முழுவதும் மிளகாய் பொடியை துாவி, 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து, ராசிபுரம் போலீசார் நடத்திய விசாரணையில், திருச்சியை சேர்ந்த குமார் மகன் ராஜசேகரன், 31, மதுரையை சேர்ந்த ஜெயமணி மகன் மகேந்திரன், 33, ஆகிய இருவரும் ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும், ராஜசேகரன், திருச்சி மத்திய சிறையிலும், மகேந்திரன் புதுக்கோட்டை சிறையிலும் இருப்பது தெரியவந்தது.
அவர்கள் இருவரையும் கஸ்டடி எடுத்த ராசிபுரம் போலீசார் விசாரித்தனர். அதில், ஆசிரியர் வீட்டில் கொள்ளையடித்த நகைகளை உருக்கி, தங்க கட்டியாக வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை மீண்டும் சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை; பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'
-
பந்தல் அமைக்கும் பணி அமைச்சர் பார்வை
-
சில்வர் பீச் சுற்றுலா தலமாக மாற்றப்படும்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
-
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்