பந்தல் அமைக்கும் பணி அமைச்சர் பார்வை

கடலுார்: தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலுார் வருகைக்காக பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் கடலுார் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தருகிறார். இதனை முன்னிட்டு கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று கடலுார் மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

பந்தல், மேடை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகர கமிஷனர் அனு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement