சிறுமிக்கு தொல்லைவாலிபர் மீது போக்சோ
சிறுமிக்கு தொல்லைவாலிபர் மீது போக்சோ
ப.வேலுா: நாமக்கல் மாவட்டம், பரமத்தியை சேர்ந்தவர், 16 வயது சிறுமி; அரசு பள்ளியில், பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் கண்ணன், 32, சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்துள்ளார். தொடர்ந்து தொல்லை கொடுத்ததால், கடந்த, 30ல் விஷம் குடித்து சிறுமி தற்கொலைக்கு முயன்றார். அப்போது, கண்ணன் காதலிக்க வற்புறுத்தி, தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ப.வேலுார் மகளிர் போலீசில், பெற்றோர் புகாரளித்தனர். இதையடுத்து கண்ணன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து, தலைமறைவான
அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement