வாடகை செலுத்தாத நகராட்சிகடைகளுக்கு சீல் வைப்பு



வாடகை செலுத்தாத நகராட்சிகடைகளுக்கு சீல் வைப்பு


கரூர் : கரூர் அருகே, வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கடைகள், வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அதில், புகழூரில் டி.என்.பி.எல்., சாலையில் உள்ள மூன்று கடைகளு க்கு, மாத வாடகை பல மாதங்களாக செலுத்தப்படவில்லை. இதுகுறித்து, நகராட்சி நிர்வாகம் பலமுறை கடிதம் அனுப்பியும், வாடகைதாரர்கள் வாடகையை செலுத்தவில்லை. இதனால், நேற்று புகழூர் நகராட்சி அலுவலக மேலாளர் நாகராஜன், கணக்காளர் சண்முகம், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர், மூன்று கடைகளை பூட்டி சீல் வைத்தனர். இதனால், புகழூர்-டி.என்.பி.எல்., சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement