91,245 கோழிகளுக்கு நோய் தடுப்பூசி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்
91,245 கோழிகளுக்கு நோய் தடுப்பூசி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் தகவல்
கரூர் :''கரூர் மாவட்டத்தில், வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, 91 ஆயிரத்து, 245 நாட்டு கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது,'' என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்தார்.கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட பல்வேறு கேள்வி களுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் தங்கவேல் பேசியதாவது:கரூர் மாவட்டத்தில் உள்ள, அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் போதுமான அளவில், 6.051 மெட்ரிக் டன் ரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நெல் பயிர் சாகுபடிக்காக, 1.70 மெட்ரிக் டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறு
தானிய விதைகள், 46.500 மெட்ரிக் டன், பயறு வகைகள், ஏழு மெட்ரிக் டன், எண்ணெய் வித்துக்கள், 48.700 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இயல்பான மழையளவு, 652.20 மி.மீ., நடப்பாண்டு ஜனவரி மாதம் வரை, ஒன்பது மி.மீ., மழை பெய்துள்ளது. மேலும் நவம்பர் மாதம் வரை, 56.957 ெஹக்டேர் பரப்பளவில், வேளாண்மை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு, 10 முதல், 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதில் அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு பூச்சி நோய் தாக்குதலை அறிந்து கொள்ள, விழிப்புணர்வு வழிகாட்டி வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் கடந்த ஜன.,1 முதல், 14 வரை வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி, 91 ஆயிரத்து, 245 நாட்டு கோழிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு பேசினார்.கூட்டத்தில், டி.ஆர்.ஓ., கண்ணன், உதவி கலெக்டர் சுவாதி ஸ்ரீ, வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவானந்தம், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சரவணன் உள்பட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக, தேசிய கொத்தடிமை தொழி லாளர் ஒழிப்பு தினத்தையொட்டி, கலெக்டர் தங்கவேல் தலைமையில், அதிகாரிகள், ஊழியர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
அதிகாரிகளுக்கு எச்சரிக்கைகரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், விவசாயி நடராஜன் என்பவர், பெரும்பாலான கோரிக்கை மனுக்களுக்கு, அதிகாரிகள் உரிய பதில் அளிப்பது இல்லை என தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட கலெக்டர் தங்கவேல், விவசாயிகள் குறைதீர் கூட்டம் மட்டுமின்றி, எந்த கோரிக்கை மனுக்கள் மீதும், அதிகாரிகள் விசாரித்து உரிய பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
மேலும்
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
-
வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு
-
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்
-
இந்தியா பதிலடி
-
மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ்