கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை
கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிவிளக்குகள் அமைக்க மக்கள் கோரிக்கை
கரூர்: கரூர்-வாங்கல் இடையே சாலை விரிவாக்க பணிகள் நடந்து முடிந்த நிலையில், போதிய மின் விளக்குகள்
இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர்-வாங்கல், நாமக்கல்-மோகனுார் பகுதிகளை இணைக்கும் வகையில், வாங்கலில் காவிரியாற்றின் குறுக்கே கடந்த, 2016ல், புதிய உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதனால் மோகனுாரில் இருந்து, கரூர் நகருக்கு நாள்தோறும் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மேலும், கரூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து, மோகனுார் தினசரி சந்தைக்கு, விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்கின்றனர். இதனால், கரூர்-வாங்கல் சாலையை
விரிவுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.இதையடுத்து கடந்த, 2020ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது தொடங்கிய கரூர்-வாங்கல் சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்றது. இந்நிலையில், வாங்கல் சாலையில் போதிய மின் விளக்குகள் இல்லை. இதனால், இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்வோர், தடுமாறி பள்ளத்தில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, கரூர்-வாங்கல் சாலையில், போதிய மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை; பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'
-
பந்தல் அமைக்கும் பணி அமைச்சர் பார்வை
-
சில்வர் பீச் சுற்றுலா தலமாக மாற்றப்படும்; அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்
-
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் 1008 தாமரை பூக்கள் அர்ச்சனை
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்