கரூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும்பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி


கரூர் சுற்று வட்டார பகுதிகளில் கடும்பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி


கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும் எனவும், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தென் மாவட்டங்களில் மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வறண்ட வானிலை காணப்படும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
கரூர் நகரில் திருச்சி, மதுரை, ஈரோடு, கோவை மற்றும் சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று காலை, 8:30 மணி வரை கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.
* நேற்று காலை வழக்கத்திற்கு மாறாக, கடுமையான மூடு பனி நிலவியதால், கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலை மற்றும் ராணிமங்கம்மாள் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கினர். குளிரால் மக்கள் தவித்தனர்.


Advertisement