மீனவர்கள் 14 பேருக்கு அபராதம்
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், 14 பேருக்கு அபராதமும், இருவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டிச., 23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரு படகுகளை பறிமுதல் செய்து, அதில் இருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தது. இவர்களை, வாய்தா நாளான நேற்று மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
இவர்களில், 14 மீனவர்களுக்கு, 50,000 ரூபாய் அபராதம் கட்ட தவறினால், 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இரு படகுகளின் டிரைவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
படகு உரிமையாளர்களில் ஒருவரான பூண்டிராஜ் பிப்., 21ல் ஆஜர்படுத்தப்படும் போது, தண்டனை குறித்து அறிவிக்கப்படும் என, நீதிமன்றம் தெரிவித்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சட்ட விரோத அமெரிக்க குடியேற்றம் ஹரியானா ஏஜன்டுகள் மீது வழக்கு
-
வாரணாசி அன்னபூர்ணேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்; சிருங்கேரி சங்கராச்சாரியார் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமி நடத்தினார்
-
வந்தே பாரத் ரயில்களில் பணம் கொடுத்தால் உணவு
-
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள்
-
இந்தியா பதிலடி
-
மூணாறில் 'டபுள் டெக்கர்' பஸ்
Advertisement
Advertisement