மீனவர்கள் கைது லோக்சபாவில் தி.மு.க., கோஷம்
புதுடில்லி : லோக்சபாவில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து, தி.மு.க., - எம்.பி.,க்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
அப்போது தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேசுகையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் துன்புறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்; 97க்கும் மேற்பட்டோர், அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
“மீன்பிடி படகுகளை இலங்கை பறிமுதல் செய்துள்ளதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு தலையிட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும்,” என்றார்.
தொடர்ந்து, இந்த பிரச்னையை வலியுறுத்தி, பார்லி., வளாகத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள் தலைமையில், 'இண்டி' கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து (3)
vadivelu - thenkaasi,இந்தியா
08 பிப்,2025 - 02:37 Report Abuse
யாருக்கும் வெட்கம் இல்லை
0
0
Reply
Ganapathy - chennai,இந்தியா
08 பிப்,2025 - 02:25 Report Abuse
இலங்கை தமிழீழ மக்களை நீ கொலை செய்து அவர்களின் பிணங்களின் பெயரில் பணம் பாத்து நீ காட்டும் இந்த பணக்கார திமிர் எத்தனை நாள் நீடிக்கும்?
0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
08 பிப்,2025 - 01:59 Report Abuse
தமிழகத்தில் திருட்டு திராவிட கழுதைகள் செய்யும் போதை பொருள் கடத்தல், திருட்டு மீன் பிடித்தல் போன்றவற்றை இலங்கை கடல்பகுதியில் செய்தால், இலங்கை ராணுவம் உள்ள வச்சி செஞ்சி தான் அனுப்புவாங்க. தமிழகமீனவர்களை தண்டிப்பதில் எந்த தவறும் இல்லை. இன்னும் நாலுமாசம் உள்ள வையுங்க என்று தான் இலங்கைக்கு இந்திய தூதரகம் அறிவுரை கூற முடியும்.
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement