வருடாபிஷேகம்

வாடிப்பட்டி: கச்சைகட்டி பெரியார் நகரில் கருப்புச்சாமி, சின்னனசாமி, பாப்பாத்தி அம்மன், குன்றுமலை முருகன் கோயில் 13ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது.

இதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜைகள், அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. அம்மன், சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை முடிந்து பிரசாதம் வழங்கினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை குழுவினர் செய்திருந்தனர்.

Advertisement