ஈரோடு இடைத்தேர்தல்; 10 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க., முன்னிலை
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று (பிப்.,08) காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இரண்டாம் சுற்று முடிவில், தி.மு.க., வேட்பாளர் 11,140 ஓட்டுக்கள் பெற்று, முன்னிலையில் உள்ளார். நாம் தமிழர் வேட்பாளர் 1,081 ஓட்டுக்கள் பெற்றுள்ளார்.
மொத்தம் 72% ஓட்டுக்கள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. மொத்தம் 17 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட உள்ளன. தற்போது, இரண்டாம் சுற்று முடிவில், தி.மு.க., வேட்பாளர் 11,140 ஓட்டுக்கள் பெற்று, முன்னிலையில் உள்ளார்.
முன்னிலை நிலவரம்!
சுற்று வாரியாக முன்னிலை நிலவரம் பின்வருமாறு:
முதல் சுற்று
தி.மு.க.,- 8,025 ஓட்டுக்கள்
நாம் தமிழர் கட்சி- 1,081 ஓட்டுக்கள்
இரண்டாம் சுற்று
தி.மு.க., - 11,140 ஓட்டுக்கள்
நாம் தமிழர்- 1,081 ஓட்டுக்கள்
அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெறுவது யார்? என்பது மதியத்திற்குள் தெரியவரும்.
கடந்த தேர்தலில்...!
கடந்த 2023ம் ஆண்டு நடந்த இடைத் தேர்தலில் 74.79 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இளங்கோவன்- 1 லட்சத்து, 10,156 ஓட்டும், அ.தி.மு.க., தென்னரசு, 43,923 ஓட்டும் பெற்றனர். வெற்றி வித்தியாசம், 66,233 ஓட்டாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.