சேதமடைந்த பாலம்: கமிஷனர் ஆய்வு

திருநகர்,: மதுரை திருநகர் 7வது பஸ் ஸ்டாப்பிலிருந்து பாலசுப்பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில் திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாய் மேல் தரைப்பாலம் உள்ளது.

பாலத்தின் சேதமடைந்த பகுதியில் லாரி சிக்கியதால்சேதம் அதிகமானது. போக்குவரத்து தடை செய்யப்பட்டது. நேற்று மாநகராட்சி கமிஷனர் சித்ரா பார்வையிட்டார். கவுன்சிலர் சுவேதா, உதவிப் பொறியாளர் தியாகராஜன் உடன் இருந்தனர். சேதமடைந்த பாலத்தை முற்றிலும் அகற்றி விட்டு ரூ.15 லட்சத்தில் புதிய தரைப்பாலம் அமைக்க கமிஷனர் உத்தரவிட்டார்.

Advertisement