புதுார் தாமரைத் தொட்டி சந்திப்பு விரிவாக்கம்

மதுரை: மதுரை அழகர்கோவில் ரோடு - ரேஸ்கோர்ஸ் ரோடு சந்திப்பு தாமரைத் தொட்டி பகுதியில் போக்குவரத்தை எளிதாக்க விரிவாக்கம் செய்யும் பணி நடந்தது.

இச்சந்திப்பில் இடதுபுறம் திரும்பி நத்தம் ரோடு பகுதிக்கு செல்லும் வாகனங்கள் 'பிரீ லெப்ட்' செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் ரோட்டை விரிவாக்கம் செய்து, ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து பணி நடந்து வருகிறது.

இதேபோல் காமராஜ் பல்கலை கல்லுாரி அருகே சந்திப்பில், நத்தம் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் மாநகராட்சி பகுதிக்கு வலதுபுறம் திரும்புவதில் (பிரீ ரைட்) சிரமப்படுகின்றன.

இதற்காக இங்குள்ள மாநகராட்சி வார்டு அலுவலக சுற்றுச் சுவரும் விரைவில் அகற்றப்பட உள்ளது.

Advertisement