பிப்.13ல் தெப்பத் திருவிழா

சோழவந்தான்: திருவேடகம் ஏலவார்குழலி ஏடகநாதர்கோயிலில் பிப்.13ல் தெப்பத் திருவிழா நடக்கிறது. அன்று காலை 10:30 மணிக்கு சுவாமி அம்மனை கோயிலில் இருந்து தெப்பத்திற்கு அழைத்து வருதல், மதியம் 12:30 மணிக்கு அன்னதானம், மதியம் 3:30 மணிக்கு மேல் உலக நன்மைக்காகவிசேஷ அபிஷேகம், அலங்கார தீபாராதனை, விளக்கு பூஜை நடக்கிறது.

மாலை 6:00 மணிக்கு மேல் சுவாமி, அம்மன் மின் அலங்காரத்தில் ரத வீதியில் எழுந்தருளுகின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சேவுகன், விழா குழுவினர், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement