கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிப்பு

மதுரை: ஆண்டுதோறும் பிப்.9ல் 'கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி ஆலோசனைப்படி, இணை ஆணையர் சுப்ரமணியன் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். கலெக்டரின்நேர்முக உதவியாளர் சந்திரசேகரன், சுகாதார இயக்கக இணை இயக்குனர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சரவணசெந்தில்குமார் விழிப்புணர்வு கையெழுத்து இயக்க வாகனத்தை துவக்கி வைத்தார். மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் அலங்காநல்லுார் கலைக்குழுவினர் விழிப்புணர்வு நாடகத்தை நடத்தினர். துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கட்டப்பட்டன. கொத்தடிமை தொழிலாளர் ஒருங்கிணைப்பு அலுவலர் கார்த்திகேயன் கூறுகையில், ''கொத்தடிமை தொழிலாளர் எவரேனும் பணியமர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தால், மூன்றாண்டு சிறை, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

Advertisement