கல்லுாரி மாணவர் வெட்டிக்கொலை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3849639.jpg?width=1000&height=625)
மேலுார்: மேலுாரில் பெண் விவகாரத்தில் கல்லுாரி மாணவர் பாண்டிகுமரன் 20, வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
எட்டிமங்கலம் ஊராட்சி வீரபத்திரன்பட்டி ராஜபாண்டியன். ஓய்வுபெற்ற பேராசிரியர். குடும்பத்துடன் மேலுாரில் வசிக்கிறார். இவரது மகன் பாண்டிகுமரன் 20. தனியார் கல்லுாரியில் பி.ஏ., ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படித்தார்.
நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு பாட்டி தமயந்தியை காரில் சுக்காம்பட்டியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
அப்போது நண்பரான மேலுார் முத்தமிழ் நகர் கிஷோர் அலைபேசியில் தொடர்பு கொண்டு சுக்காம்பட்டி கேட்டு கடை பகுதிக்கு வருமாறு கூறினார்.
பாட்டியிடம் கூறிவிட்டு சென்ற பாண்டிகுமரன், திரும்பி வரவில்லை. அலைபேசியில் தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை. சந்தேகமடைந்த பாட்டி, கேட்டு கடை பகுதிக்கு நடந்து சென்றுபார்த்தபோது அங்கு பாண்டிகுமரன் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். கிேஷார் தலைமறைவாக உள்ளார்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்க டி.எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கிேஷார் குறித்து அவரது நண்பர் ஸ்ரீதரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெண் விவகாரம் தொடர்பாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதற்கிடையே கிேஷாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
மேலும்
-
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்; ஓட்டு எண்ணிக்கை துவக்கம்
-
டில்லியில் வெற்றி யாருக்கு? ஓட்டு எண்ணிக்கை 'விறுவிறு'
-
அடுத்த வாரம் பரஸ்பர வரி அறிவிப்பேன்: டிரம்ப் திட்டவட்டம்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.37,000 லஞ்சம்; தப்பிய வி.ஏ.ஓ.,வுக்கு வலை
-
வெண்புகையாய் பனிமூட்டம்; சென்னையில் ரயில், விமான சேவைகள் பாதிப்பு
-
அ.தி.மு.க., தலைமையிடம் கள ஆய்வு குழுவினர் அறிக்கை