சிவகாமியம்மன் பூலாநந்தீஸ்வரர் கோயில் மகாகும்பாபிஷேகம் யாகசாலை பூஜைகள் துவங்கியது

சின்னமனூர்,: சின்னமனூர் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் பிப் . 10 ல் நடைபெறுவதை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் துவங்கியது.

செப்பேடுகள் கண்ட சின்னமனூர் என்னும் சிறப்பு பெற்ற ஊராகும். இங்குள்ள சிவகாமியம்மன்,பூலாநந்தீஸ்வரர் கோயில் வரலாற்று சிறப்பு பெற்ற கோயில்.

பூலாநந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றியவர், பிரார்த்திக்கும் பக்தருக்கு ஏற்றபடி அவரவர் உயரத்திற்கு அளவாக காட்சி தருவதால், அளவுக்கு அளவானவர் என்ற பெயர் பெற்றவர். இந்த கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் பிப். 10 ல் நடக்கிறது.

அதற்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை துவங்கியது. அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை, புன்யாகாவாசனம், தன பூஜை, வாஸ்து சாந்தி, ருத்சங்க்ரஹனம், தீபாராதனை நடைபெற்றது.

நேற்று காலை கணபதி, நவக்கிரக ஹோமங்களுடன் முதற் கால யாக பூஜைகள் நடைபெற்றது.

நாளை யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது.

பிப் . 10 காலை 9:05 மணி முதல் 9:30 மணிக்குள் கலசங்களில் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெறும். தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல், காயத்ரி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தாளாளர் விரியன்சாமி, செயல் அலுவலர் நதியா உள்ளிட்ட உபயதாரர்களும், ஹிந்து சமய அறநிலைய துறையினரும் செய்து வருகின்றனர்.

Advertisement