பிப்.12ல் மக்கள்  தொடர்பு முகாம்

தேனி: கொடுவிலார்பட்டி ஊராட்சி கோவிந்தநகரம் வருவாய் கிராமம் குப்பிநாயக்கன்பட்டியில் பிப்.12ல் காலை 10:00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடக்கிறது.

இதில் தேனி வட்டார பொது மக்கள் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, புதிய ரேஷன் கார்டு, விபத்து நிவாரணம் உட்பட அனைத்து துறைகளில் நிவர்த்தி செய்ய வேண்டிய குறைகள் குறித்து மனுவாக முகாமில் வழங்கி தீர்வு பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Advertisement