வணிகர் சங்க முப்பெரும் விழா
தேனி: தேனி மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், முப்பெரும் விழா திருமண மஹாலில் நடந்தது. மாவட்டத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு, பொருளாளர் சதக்கத்துல்லா உள்ளிட்ட பொறுப்பாளர்கள் வாழ்த்தினர்.
விழாவில்போடி சென்னை ரயில் சேவையை தினசரியும், போடி மதுரை ரயில் சேவையை பகலில் ஒருமுறை இயக்க வேண்டும். திண்டுக்கல் --குமுளி அகல ரயில்பாதை திட்டப் பணியை துரிதப்படுத்த வேண்டும். தேனியில் நடந்து வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். வணிக வரி சட்டங்களில் விதிமீறல்கள்இருப்பின் அதனை குற்றவியல் குற்றங்களாக கருதி வணிகர்களை குற்றவாளிகளாக உருவாக்கும் நடைமுறையை கைவிட வேண்டும்.
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட கவுரவத் தலைவர் சந்திரகுமார், சிறப்பு ஆலோசகர் குமார், அவைத் தலைவர் தங்கராஜ், மாவட்டச் செயலாளர் திருவரங்கபெருமாள், பொருளாளர் அருஞ்சுனைக்கண்ணன்,கிளைச் செயலாளர் விபுகுமார், அமைப்புச் செயலாளர் ஹக்கீம், துணைத் தலைவர் முருகதாஸ், இளைஞரணி துணை அமைப்பாளர் ப்ரீதம்திவாகர், நகர முதன்மை துணைத் தலைவர் பிரபு, நகர துணைத் தலைவர் கலைமணி,அச்சக உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ஞானேஸ்வரன், சரவணக்குமார், அகிலா ஜூவல்லரி நிர்வாக இயக்குனர் பிரேம்சாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.