மூணாறில் கால்பந்தாட்ட போட்டிகள் இன்று துவக்கம்

மூணாறு: மூணாறில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக நடத்தப்படும் 76ம் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டிகள் இன்று (பிப்.8) துவங்குகின்றன.

மூணாறில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை பங்குதாரர்களாக உட்படுத்தி கே.டி.எச்.பி. கம்பெனி செயல்படுகிறது. எஸ்டேட்டுகளுக்கு இடையே தொழிலாளர்கள் பங்கேற்கும் பின்லே சுழற்கோப்பைக்கான கால்பந்தாட்டம் போட்டிகளை ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.

அதன்படி 76ம் ஆண்டு போட்டிகள் இன்று துவங்குகின்றன. 14 அணிகள் மோதுகின்றன. மூணாறு டி.எஸ்.பி. அலெக்ஸ்பேபி இன்று போட்டிகளை துவக்கி வைக்கிறார். இறுதி போட்டி பிப்.22ல் நடக்கிறது. தோட்டங்களை நிர்வாகித்த ஆங்கிலேயர்களால் தொழிலாளர்களுக்காக 1941ல் கால்பந்தாட்ட போட்டி துவங்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர், கொரோனா ஆகிய காலங்களில் மட்டும் போட்டிகள் முடங்கியது குறிப்பிடதக்கது.

Advertisement